மிடில்கிளாஸ் வலையில் இருந்து தப்பிப்பது எப்படி

மிடில்கிளாஸ் வலையில் இருந்து தப்பிப்பது எப்படி?

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாட்டில் உள்ள பலரும் மிடில்கிளாஸில் இருந்து பணக்காரராக மாற முடியாது என பலரும் நம்புகின்றனர். இப்படி அவர்கள் நினைப்பதற்கு முக்கிய காரணம்  பெரும்பாலானவர்கள் முதலீட்டின் முக்கியத்துவம் குறித்து தெரியாமல் உள்ளனர். அதேபோல முதலீடு மீதான  சரியான அணுகுமுறை இல்லாமல் உள்ளனர். இதன் காரணமாக வழக்கமான சேமிப்பு திட்டங்களை மட்டுமே நம்புகின்றனர். அதாவது ஃபிக்ஸட் டெபாசிட் மட்டுமே முதலீடு செய்வது, வீட்டுக்கு தேவையான பொருட்களை இ எம் ஐயில் வாங்குவது போன்றவற்றை மட்டுமே பின்பற்றி வருகின்றனர். மேலும் திட்டமிடாத செலவுகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த பழக்கம் அவர்களை மிடில்கிளாஸ் வலையில் இருந்து தப்பிக்க முடியாமல் வைத்திருக்கிறது. இதிலிருந்து  எப்படி விடுபடுவது என்பதைப் பார்க்கலாம்.

செலவுகளை குறைத்து சேமிக்கும் பழக்கங்களை உருவாக்குங்கள்

1. அனைத்து செலவுகளையும் கண்காணிக்கவும்:

நீங்கள் செய்யும் சின்ன சின்ன செலவுகளை கூட தொடர்ந்து கவனித்து அதை எழுதி வைப்பது அவசியம். அதாவது குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்குவதில் ஆரம்பித்து சினிமாவுக்கு போவது வரை அனைத்து செலவுகளையும் கவனித்து எழுதி வையுங்கள்

2. தேவையற்றவற்றை  செலவுகளை குறையுங்கள்:

ஒவ்வொரு மாதமும் நம்முடைய செலவுகளை தொடர்ந்து எழுதி வைத்து  அதில் தேவையற்ற செலவு எது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அதை குறைப்பதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும். அதாவது வீட்டில் உணவு இருக்கும் போது வெளியில் ஆர்டர் செய்வது, அடிக்கடி ஆடைகள் வாங்குவது ஆகியவற்றை தவிர்க்கவும்.

3. குறைந்த அளவில் சேமிப்பை தொடங்குகள்:

மாதச் செலவு ₹50,000 என்றால் அதில் 1% என்றால் கூட ₹500யில் கூட  சேமிப்பை தொடங்கலாம்.  அதாவது  ஸ்விக்கியில்  ஆர்டர் செய்வதை குறைத்தாலே மூலம் இதை செய்யலாம்.

4. Power of Habit:

சேமிப்பு பழக்கம் என்பது மிகவும் அவசியம். அதாவது சிறிய அளவு தொகையாக இருந்தால் கூட சேமிப்பை உடனே தொடங்குவதான் சிறப்பு. இந்த பழக்கம் உங்களின் எதிர்காலத்தை சிறப்பாக மாற்ற உதவும்.

முதலீட்டை பாதுகாப்பது

1. அவசர கால நிதி அவசியம்:

அவசர கால நிதி என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏனெனில் தற்போதைய சூழ்நிலையில் வேலை இழப்பு, மருத்துவ தேவை உள்ளிட்டவை எப்போது வேண்டுமானாலும் வரலாம். இது போன்ற சமயங்களில் அவசரகால நிதிதான் உங்களை காப்பாற்றும். இந்த அவசரகால நிதி என்பது  6 முதல் 12 மாத செலவுகளுக்கான தொகையை வைத்திருப்பது ஆகும்.

2. கணக்கு போடுங்கள்:

மாதச் செலவு ₹30,000 என்றால் 6 மாதத்திற்கு ₹1.8 லட்சம் தேவை. இந்தத் தொகையை பணமாகவோ அல்லது பாதுகாப்பான கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு வைத்திருப்பது முக்கியம்.

3. மருத்துவ காப்பீடு கட்டாயம்:

மருத்துவச் செலவுகள் அதிகரித்து வருவதால், மருத்துவ காப்பீடு மிகவும் அவசியம். இது உங்கள் பணத்தை பாதுகாக்க உதவும். அதாவது எதிர்பராத நேரங்களில் ஏற்படும் மருத்துவ தேவைகளுக்கு எவ்வளவு பணம் தேவை என்பது தெரியாது. அதுபோன்ற சமயங்களில் மருத்துவ காப்பீடு இருக்கும் போது, அந்த செலவை அதிலிருந்து மேற்கொள்ளலாம். இல்லையெனில் உங்களின் சேமிப்பை கரைத்து விடும்.

கடனை கட்டுப்படுத்துங்கள்

1. பகட்டு காட்டுவதைத் தவிர்க்கவும்:

சமூகத்தில் தங்களை உயர்வாக காட்ட சிலர் வாங்க முடியாத பொருட்களை கடன் வாங்கி  வாங்குகின்றனர். இதனால் தேவையற்ற கடன் வாங்க வேண்டிய சூழல் உருவாகும்.

2. கடனின் உண்மையான விலை:

பலரும் EMI பொருட்களை வாங்கினால் நமக்கு லாபம் என நினைக்கின்றனர். ஆனால் அது அப்படியில்லை ரூ.10,000 உள்ள பொருளை நீங்கள் EMI  வாங்கும் போது, அதற்கான வட்டியும் சேர்த்து கட்ட வேண்டியிருக்கும். அதுமட்டும் இல்லாமல் அந்த கடனை வாங்குவதற்கான செயல்பாட்டு கட்டணம் உள்ளிட்ட பிற கட்டணங்களும் அதில் சேரும். இவையெல்லாம் சேர்க்கும் போது நீங்கள் வாங்கும் பொருளின் விலை அதிகமாகும். மேலும் அந்த EMIயை கட்டி முடிக்கும் வரை அந்த பொருள் உங்களுடையது அல்ல. மேலும்  நீங்கள் சம்பாதித்த பணம் பெருகுவதற்கு பதிலாக இது போன்ற கடன்களால் வட்டியாக அது கரைந்து விடும்.

முதலீட்டைத் தொடங்குங்கள்

உடனே தொடங்குங்கள் :

முதலீட்டை தொடங்குவதற்கு பெரிய தொகை தேவையில்லை.  நீங்கள் மாதம் ₹1000 கூட  முதலீடு செய்யலாம். இங்கு சேமிக்கும் தொகையின் அளவு முக்கியம் இல்லை. முதலீட்டை  தொடங்குவதுதான் முக்கியம்.

உதாரணம்:

ஒரு மாதம் ₹5000 SIP-யை 10% வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால், 5 வருடம் கழித்து அது ரூ.3.85 லட்சமாக மாறி இருக்கும். அதுவே 10 வருடம் கழித்து அந்த தொகை ₹10.07 லட்சமாக மாறி இருக்கும். இதுதான் கூட்டு வட்டியின் மகத்துவம் ஆகும். எனவே முதலீட்டை உடனே தொடங்குவது அவசியம் ஆகும்.

மத்திய வர்க்க வலையிலிருந்து வெளியேறுவது வெறும் அதிக பணம் சம்பாதிப்பது அல்ல.  அது பழக்கங்களை மாற்றுவது, பெரியதாக சிந்திப்பது,  பணத்தை உங்களுக்காக வேலை செய்ய வைப்பது போன்றவற்றினால் நிகழும்.   செலவுகளை கண்காணிப்பது, முதலீட்டு பாதுகாப்பது,  கடனை கட்டுப்படுத்துவது, முதலீட்டை அதிகரிப்பது போன்றவற்றினால் மிடில்கிளாஸிம் கோடீஸ்வரார் ஆகலாம்.

Scan the code