வாழ்க்கையை வளமாக்கும் SIP Ladder Strategy

வாழ்க்கையை வளமாக்கும் SIP Ladder Strategy… எந்த விதமான குழப்பமும் இல்லாமல் செல்வத்தை உருவாக்கும் வழிமுறை…

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கனவுகள் இருக்கும். இந்த கனவுகள் ஒவ்வொரு தனிநபருக்கும் வித்தியாசப்பட்டாலும், இந்த 4 கனவுகள் கட்டாயம் இருக்கும். அதாவது குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்குவது,  2 ஆண்டுக்கு ஒரு முறை சுற்றுலா செல்வது, அடுத்த 4 ஆண்டுகளில் நல்ல கார் வாங்குவது, அடுத்த 8 – 10 ஆண்டுகளில் சொந்தமாக வீடு வாங்குவது, அடுத்த 30 ஆண்டுகளில்  நிம்மதியான ஓய்வு கால வாழ்க்கை என்பதுதான் பலரின் முக்கிய தேவையாக இருக்கும். இதெல்லாம் திட்டமிட்டு சரியாக செய்தாலே நம்முடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு தேவையும் ஒரு குறிப்பிட்ட கால இடைவேளையில் நிறைவேற்ற கட்டாயம் பிளானிங் தேவை. அதை செய்யவில்லை எனில் எந்த தேவையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், எதை தள்ளி வைக்கலாம் என்பது தெரியாமல் பெரும் குழப்பத்துக்கு உள்ளாகுவோம். இந்த ஒவ்வொரு இலக்கையும் குறித்த காலத்தில் அடைவது அவசியம் ஆகும். அப்போதுதான் அதனுடைய முழு பலனையும் அடைய முடியும்.

முதலீட்டின் முக்கிய சவால்: பல இலக்குகள்ஒரே முதலீடு என்ற அணுகுமுறை

முதலீட்டாளர்கள் பலரும் தங்களின் செல்வத்தை உருவாக்க ஒரே ஒரு முதலீடு போதும் என நினைக்கின்றனர். ஒரே SIP-யில் முதலீடு செய்து, அதிலேயே  சுற்றுலா செல்வதில் தொடங்கி  ஓய்வு கால தேவை வரை அனைத்தையும் பார்த்துக்கொள்ளலாம் என பலரும் நம்புகின்றனர்.

ஆனால் இந்த நம்பிக்கையினால்  பல பிரச்சனைகள்தான்  உருவாகின்றன. எந்த இலக்கிற்காக எவ்வளவு சேமிக்க வேண்டும் என்பது தெரியாது.  குறுகிய கால தேவைகளுக்கு நீண்டகால முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்வது, நீண்ட கால தேவைகளை நிறைவேற்றுவதற்கு குறுகிய கால திட்டங்களில் முதலீடு செய்வது போன்ற குழப்பம் ஏற்படும்.

இதுபோன்ற குழப்பங்களாலும், தவறான அணுகுமுறையாலும் நீண்டகால கூட்டு வளர்ச்சி விகிதம் எனப்படும் Compounding பாதிக்கப்படும்.  இதன் காரணமாக போர்ட்ஃபோலியோ செயல்திறனை மதிப்பீடு செய்வதும் கடினமாகும்.  இதுமட்டும் இல்லாமல் ஒவ்வொரு இலக்கையும் அடைவதற்கு சரியான முதலீட்டைதான் தேர்வு செய்து முதலீடு செய்கிறோமா என்பதில் சந்தேகம் ஏற்படும். சுருக்கமாகச் சொன்னால், அனைத்து இலக்குகளுக்கும் ஒரே SIP வைத்திருப்பது சேமிப்பை விட குழப்பத்தையே அதிகரிக்கிறது.

SIP லேடர் ஸ்ட்ராட்டஜி: ஒரு புதிய மாற்றுவழி

பல தேவைகளுக்கும், இதுபோன்ற பிரச்னைகளுக்கு ஒரே தீர்வு  SIP Ladder Strategy. இது என்ன SIP Ladder Strategy என பலரும் கேட்கலாம். நம் ஒவ்வொருவருக்கும் பலவிதமான இலக்குகள் இருக்கும். அத்தனையையும்  SIP மூலமாக நிறைவேற்ற முடியாது. அதாவது உங்களின் ஒரே ஒரு முதலீட்டு அணுகுமுறை மட்டும் போதாது. பல முதலீட்டாளர்கள் ஒரே SIP மூலம் அனைத்து இலக்குகளையும் அடையலாம் என நினைக்கிறார்கள். ஆனால் அதில்  குழப்பமே அதிகரிக்கும் என்பதுதான் உண்மை.

இந்த SIP Ladder Strategy என்பது ஒரு படிக்கட்டு போல, உங்களின் முதலீட்டை ஒவ்வொரு படியாக உயர்த்த உதவும். இதில் ஒவ்வொரு படிக்கட்டும் ஒரு இலக்காக நிர்ணயிக்கப்பட்டு, அதற்கு ஏற்ப உங்களின் இலக்கிற்கு ஏற்ப முதலீடுகள் மேற்கொள்ளப்படும்.

இதனை ஒரு உதாரணம் மூலம் பார்க்கலாம்:

ஒவ்வொரு SIPயும் ஒரு தனிப்பட்ட செல்வத்தை உருவாக்குவதற்கு கருவியாக செயல்படும். ஒன்றுக்கொன்று இடையூறு இல்லாமல், ஆனால் அனைத்தும் சேர்ந்து முழுமையான நிதி திட்டமாக அமையும்.

SIP லேடர் ஸ்ட்ராட்டஜி எப்படி வேலை செய்கிறது?

1. நோக்கத்தின் தெளிவு

ஒவ்வொரு SIPக்கும் ஒரு தெளிவான அடையாளம் இருக்கும் என்பது உங்களுக்கு தெரியும். அதாவது  ஒவ்வொரு SIP-யும் இலக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும். அதாவது  குழந்தையின் கல்விக்கு தனி SIP, ஓய்வுகால நிதிக்கு தனியாக SIP, சுற்றுலாவுக்கு தனியாக ஒரு SIP திட்டமிடப்பட்டிருக்கும். எனவே முதலீட்டிலிருந்து பணத்தை வேறு தேவைகளுக்காக எடுப்பது குறையும்.

2. வேறுவேறு இலக்குகள் = வேறுவேறு  ரிஸ்க்

அதாவது அடுத்த 2 ஆண்டுகளில் தேவைப்படும் குழந்தைகளுக்கு  கல்வி செலவு தொகையை அதிக ரிஸ்க் உள்ள திட்டங்களில் முதலீடு செய்யக்கூடாது.  அதே நேரத்தில் 25 ஆண்டுகள் கழித்து தேவைப்படும்  ஓய்வுகால தேவைக்கான பணத்தை அதிக ரிஸ்க் உள்ள ஈக்விட்டி திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

SIP லேடர் ஸ்ட்ராட்டஜி உறுதி செய்யும் விஷயங்கள்

  • குறுகிய கால இலக்குகளுக்கு மூலதன பாதுகாப்பு
  • நீண்டகால இலக்குகளுக்கு வளர்ச்சி வாய்ப்பு
  • இலக்குகளின் இடையூறை தடுக்கும்
  • கண்காணிப்பது எளிது – ஊக்கமளிக்கும்

ஒரே முதலீட்டில் அனைத்தையும் வைத்திருந்தால், சுற்றுலா செல்வதற்காக ஓய்வு பணத்தை பயன்படுத்த வேண்டிய நிலை வரும்.

சந்தை சரிவில் இருக்கும் போது  குறுகியகால தேவைக்காக,  நஷ்டத்தில் ஈக்விட்டி  முதலீட்டை விற்க நேரிடலாம். SIP லேடரில், ஒவ்வொரு ரூபாயும் ஒரு குறிப்பிட்ட இலக்கிற்காகவே ஒதுக்கப்பட்டிருக்கும். இதனால் நீண்டகால பணம் பாதுகாக்கப்படுகிறது. இலக்கின் அடிப்படையில் முதலீடு செய்யும் வளர்ச்சி  சீராக கண்காணிக்க முடியும். முதலீடும் இலக்கும் தெளிவாக இருக்கும்.

நீங்கள் இப்படிப் பார்க்க முடியும்:

  • இலக்கு 1: 82% நிறைவு
  • இலக்கு 2: 94% நிறைவு
  • இலக்கு 3: 27% நிறைவு

இப்படி இலக்கு அடிப்படையில் முதலீடு செய்யும் போது எந்த இலக்கிற்கு எவ்வளவு பணம் முதலீடு செய்துள்ளோம். இன்னும் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பது தெளிவாக தெரியும். இதன் காரணமாக உங்களின் முதலீட்டில் ஏற்படும் வளர்ச்சி உங்களை உற்சாகப்படுத்தும்.  இதன் காரணமாக நம்பிக்கையும் தெளிவும் இருக்கும்.

SIP லேடர் ஸ்ட்ராட்டஜியை எப்படி நடைமுறைப்படுத்துவது?

Step 1:

உங்கள் அனைத்து இலக்குகளையும் பட்டியலிடுங்கள் — இதில் உங்களின் இலக்குக்கான தேவையை குறுகிய காலம் , நடுத்தர காலம், நீண்டகால இலக்கு என பிரியுங்கள்.

Step 2:

ஒவ்வொரு இலக்கிற்கும் காலக்கெடு மற்றும் இலக்குக்கான தொகையை நிர்ணயிக்கவும். இதனால் உங்களின் கனவுகள் அனைத்தும் எண்ணிக்கைகளாக மாறும்.

Step 3:

தேவையான SIP தொகையை கணக்கிடுங்கள் — SIP கணக்கீட்டாளர்கள் அல்லது நிதி ஆலோசகரின் உதவியுடன் இதை செய்வது நல்லது.

Step 4:

காலக்கெடுக்கு ஏற்ப முதலீட்டு வகையைத் தேர்வு செய்யுங்கள்:

  • குறுகிய காலம் – லிக்விட் & அல்ட்ரா ஷார்ட் டெப்ட்
  • நடுத்தர காலம் – ஹைப்ரிட் / பேலன்ஸ்டு ஃபண்ட்
  • நீண்டகாலம் – ஈக்விட்டி சார்ந்த முதலீட்டு திட்டங்கள்

Step 5:

ஒவ்வொரு இலக்கிற்கும் தனித்தனி SIP தொடங்குங்கள். உங்களின் மொத்த முதலீட்டு தொகையை உங்களின் இலக்கு அடிப்படையில் 4 ஆக பிரியுங்கள்.  மொத்தம் 4  SIP ஆக போடுங்கள்.

Step 6:

முதலீட்டை தினமும் ஆய்வு செய்து பார்க்கக்கூடாது. ஆண்டுக்கு ஒருமுறை முதலீட்டை ஆய்வு செய்தால் அதுவே போதுமானதாக இருக்கும்.

Step 7: உங்களின் எதிர்கால இலக்கு அடிப்படையில் முதலீடு செய்யும் போது, உங்களின் இலக்குக்கான தேவை இன்னும் 1-2 ஆண்டுகளில் நெருங்கும் போது, அந்த முதலீட்டை ஈக்விட்டியிலிருந்து லிக்விட் வகைகளுக்கு திட்டங்களுக்கு மாற்று போது ஷேர்மார்க்கெட்டின் ஏற்ற இறக்கத்தின் பாதிப்பிலிருந்து தப்பித்து கொள்ளலாம்.

Scan the code