சந்தை வீழ்ச்சியைக் கண்டு அச்சமா? முதலீட்டாளர்கள் தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்!

சந்தை வீழ்ச்சியைக் கண்டு அச்சமா? முதலீட்டாளர்கள் தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்!

உங்களால் பங்குச் சந்தையைக் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் அதற்கு நீங்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறீர்கள் என்பதைக் கட்டுப்படுத்த முடியும். புவிசார் அரசியல் பதற்றம் உள்ள காலக்கட்டங்களில், பங்குச் சந்தைகள் நிலையற்றதாக இருக்கத் தொடங்குகின்றன. ஆனால் சந்தைகளை விட, முதலீட்டாளர்களின் நம்பிக்கையே பெரும்பாலும் ஆட்டம் காண்கிறது. நிச்சயமற்ற தன்மை கவலையைத் தருகிறது. அதனுடன் சேர்ந்து, “பங்குகளை விற்கலாமா? இன்னும் இழப்புகள் ஏற்படுமா? அல்லது நீண்டகாலமாக உருவாக்கிய செல்வம் கரைந்துவிடுமா?” என்பது போன்ற எண்ணங்களும் வருகின்றன.

இத்தகைய காலக்கட்டங்களில், சந்தைகளைக் கையாள அதீத திறமை தேவையில்லை. அமைதியாகவும் ஒழுக்கமாகவும் இருக்கும் மனவலிமையே மிக முக்கியமானது. நீண்டகாலச் செல்வம் என்பது சரியான பங்குகளைத் தேர்ந்தெடுப்பதாலோ அல்லது சந்தையின் ஏற்ற இறக்கத்தைக் கணிப்பதாலோ மட்டும் உருவாக்கப்படுவதில்லை. மாறாகப் பொறுமை, நிலைத்தன்மை மற்றும் சரியான மனநிலை ஆகியவற்றின் மூலம் கட்டமைக்கப்படுகிறது.

இந்தப் பதிவில், முதலீட்டாளர்கள் பணத்தை இழக்கக் காரணமாக இருக்கும் மனநிலை சார்ந்த 5 தவறுகளைப் பற்றிப் பார்ப்போம்.

1. நஷ்டத்தைத் தவிர்க்கும் மனப்பான்மை

ஒரு உதாரணத்திற்கு, ஈரான் மீது அமெரிக்கா குண்டு வீசுகிறது என்று வைத்துக்கொள்வோம். இதனால் சந்தைகள் ஜனவரி 2026-ம் ஆண்டில் இருந்த உச்சத்திலிருந்து 10 சதவீதத்திற்கும் மேல் வீழ்ச்சியடைகின்றன. உடனே நமது போர்ட்ஃபோலியோவும் தாக்குதலுக்கு உள்ளாவது போல் உணர்கிறோம்.

நீங்கள் ஒரு பங்கினை ₹100-க்கு வாங்கியிருப்பீர்கள். சந்தை வீழ்ச்சியால் அது ₹90-ஆகக் குறைகிறது. இந்த நேரத்தில் நீண்டகால நோக்கில் சிந்திப்பதற்குப் பதிலாக, “₹80-ஆகக் குறைவதற்குள் இப்போதே விற்றுவிடு” என்று உங்கள் மனம் சொல்வதைக் கேட்பீர்கள். எனவே நீங்கள் ₹90-க்கு விற்கிறீர்கள்.

ஆனால் அடுத்து என்ன நடக்கிறது? அந்தப் பங்கு ₹110-ஆக உயர்கிறது. அதாவது நஷ்டத்தைத் தவிர்க்க முயன்று, நஷ்டத்தை நீங்களே உறுதி செய்துவிடுகிறீர்கள். இதுதான் இழப்பு தவிர்ப்பு மனப்பான்மை. ஆதாயங்களை விட இழப்புகள் மனதைக் கடுமையாகத் தாக்கும். நிலையற்ற காலங்களில், இந்த அச்சம் முதலீட்டாளர்களைத் தவறான நேரத்தில் வெளியேறச் செய்கிறது.

2. மந்தை மனப்பான்மை

சந்தைகள் சரியும்போது, அலுவலகம் முதல் வாட்ஸ்அப் குழுக்கள் வரை எல்லா இடங்களிலும் எதிர்மறையான கருத்துகளே இருக்கும். உங்களுக்குப் பங்குகளை விற்கும் எண்ணம் இருக்காது, ஆனால் “சந்தை மேலும் சரிவதற்கு முன்பு நாம் வெளியேறிவிடலாமோ?” என்று உங்களுக்குத் தோன்றத் தொடங்கும். அதாவது, “மற்றவர்களுக்குத் தெரிந்த ஏதோ ஒரு விஷயம் நமக்குத் தெரியவில்லையோ?” என்று நினைத்து மற்றவர்களைப் பின்பற்றி நீங்களும் வெளியேறுவீர்கள்.

3. சமீபத்திய நிகழ்வுகளின் தாக்கம்

கடந்த 2 வாரங்களில் நீங்கள் கேட்டவை…

போர்ச் செய்திகள் → சந்தை சரிவு → எண்ணெய் விலை உயர்வு → எதிர்மறையான தலைப்புச் செய்திகள்.

“சந்தை தொடர்ந்து சரிந்துகொண்டே இருக்கும்” என உங்கள் மூளை சொல்லும். எனவே, நீங்கள் காத்திருக்கத் தொடங்குவீர்கள். நிஃப்டி 26,000-லிருந்து 23,000 புள்ளிகளுக்கு வரும். நீங்கள் 20,000 புள்ளிகள் வரும் வரை காத்திருப்பீர்கள். ஆனால் சந்தை வீழ்வதற்குப் பதிலாக, மீண்டும் மீண்டு ஏறத் தொடங்கும்.

சமீபத்திய நிகழ்வுகளின் மனப்பான்மை என்பது, சற்று முன்பு நடந்தவை தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும் என்று நம்புவது. ஆனால் சந்தைகள் நேர்க்கோட்டில் நகர்வதில்லை. போர்களின் போது கூட, சந்தைகள் பெரும்பாலும் எதிர்பார்த்ததை விட வேகமாக நிலைபெற்று மீண்டுள்ளன.

ஒரு சுவாரஸ்யமான விஷயம்: கோவிட் காலத்தில், சந்தைகள் வெறும் 2 மாதங்களில் கடுமையாகச் சரிந்தன. ஆனால் அடுத்த 7-8 மாதங்களில் வலுவான ஆதாயங்களுடன் மீட்சி அதைவிட வேகமாக நிகழ்ந்தது. பெரும்பாலான முதலீட்டாளர்கள் இந்த ஆதாயத்தைத் தவறவிட்டனர்.

4. அதீத தன்னம்பிக்கை

ஒருவேளை சந்தை  சரிவுக்கு முன்பு நீங்கள் விற்றிருந்தால், சரியான நேரத்தில் ஒரு நல்ல முடிவை எடுத்ததாக நீங்கள் நினைக்கத் தொடங்குவீர்கள். “இந்தச் சந்தையின் ஏற்ற இறக்கத்தை என்னால் கணிக்க முடியும்” என்று உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எனவே குறைந்த விலையில் வாங்குவதற்காக நீங்கள் காத்திருப்பீர்கள்.

ஆனால், சந்தை உங்களுக்கு அந்த வாய்ப்பைக் கொடுப்பதில்லை. பிறகு, அதிக விலையில் வாங்குவீர்கள். மீண்டும் அடுத்த சரிவுக்கு முன்பு விற்க முயற்சிப்பீர்கள். இறுதியில், அதிகப்படியான செயல்பாடுகளால் (Over-trading) லாபம் குறையும். சந்தையின் ஏற்ற இறக்கத்தைச் சீராகக் கணிப்பது அனுபவம் வாய்ந்த நிதி மேலாளர்களுக்குக் கூடக் கடினமானது.

5. உறுதிப்படுத்தும் சார்புநிலை

“போரின் காரணமாகச் சந்தை மேலும் வீழ்ச்சியடையும்” என்று நீங்கள் நம்பினால், இப்போது நீங்கள்,

  1. எதிர்மறையான செய்திகளை மட்டும் படிப்பீர்கள்.
  2. சாதகமான சமிக்ஞைகளைப் (Signals) புறக்கணிப்பீர்கள்.
  3. உங்கள் கருத்தை ஆமோதிக்கும் நபர்களின் பேச்சை மட்டுமே கேட்பீர்கள்.

இதனால் உங்கள் நம்பிக்கை வலுவடைகிறது. ஆனால், அது சரியான தகவல் என்பதால் அல்ல. உங்களுக்குத் தேவையான தகவல்களை மட்டும் நீங்கள் வடிகட்டி எடுத்துக்கொள்வதால் மட்டுமே. இதற்கிடையில் சந்தை மீளும்போது, நீங்களோ இன்னும் அந்த வீழ்ச்சிக்காகக் காத்துக் கொண்டிருப்பீர்கள். இதுதான் உறுதிப்படுத்தும் சார்புநிலை – அதாவது முழுமையான சித்திரத்தைக் காணத் தவறுவது.

ஆகவே, நம்மால் சந்தையைக் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் அதற்கு நாம் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறோம் என்பதைக் கட்டுப்படுத்த முடியும். Milestones2Wealth நிறுவனம் பல ஆண்டுகளாக, இத்தகைய நிச்சயமற்ற காலங்களில் முதலீட்டாளர்கள் ஒழுக்கத்துடன் இருக்கவும், அவர்களின் செல்வத்தைப் பாதுகாக்கவும், அவர்களின் நிதி இலக்குகளை நோக்கிய பாதையில் அவர்களை வழிநடத்தவும் உதவியுள்ளது. நீங்கள் Milestones2Wealth பயணத்தைத் தொடங்க விரும்பினால், இன்றே எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்!

Scan the code