பங்குச் சந்தை மக்களுக்கு தங்கள் பணத்தை வளர்த்து, அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நம்பிக்கையைத் தருகிறது. அதே நேரத்தில், அதற்கு அதன் இருண்ட பக்கமும் உள்ளது. அதாவது மோசடிகள். பெரும்பாலான மோசடிகள் முதலில் மோசடிகளாகத் தெரிவதில்லை. இந்த மோசடிகள் உற்சாகமூட்டுவதாகவும், அவசரப்படுத்துவதாகவும், நம்பிக்கையூட்டுவதாகவும் தோன்றுகின்றன, ஆனால் விழிப்புணர்வு மற்றும் சில புத்திசாலித்தனமான பழக்கவழக்கங்கள் இருந்தால், இந்த மோசடிகளில் இருந்து நீங்கள் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
நீங்கள் முதலீடு செய்கிறீர்கள் அல்லது முதலீடு செய்யத் திட்டமிடுகிறீர்கள் என்றால், நீங்கள் ஒரு விஷயத்தை தெளிவாகக் கற்றுக்கொள்ள வேண்டும். பங்குச் சந்தையில் குறுக்குவழிகள் இல்லை. எளிதாக பணம் கிடைக்கும் என உறுதியளிக்கும் எவரும் பொதுவாக உங்களுடைய பணத்தை எடுத்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்.
இந்த வலைப்பதிவில், இந்த மோசடிகள் எவ்வாறு செயல்படுகின்றன, மேலும் முக்கியமாக, உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றிப் பேசுவோம்.
1. “உத்தரவாத வருமானம்” குறித்து எச்சரிக்கையாக இருங்கள்
மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகளைப் பயன்படுத்துவார்கள். அதாவது “உத்தரவாத வருமானம்” கிடைக்கும் அல்லது குறுகிய காலத்தில் உங்கள் பணம் இரட்டிப்பாகும் என்று வாக்குறுதி அளிக்கின்றனர். ஆனால் பங்குச் சந்தை யாருக்கும் எதற்கும் உத்தரவாதம் அளிக்காது. இன்னும் கூட உண்மை என்னவென்றால், நிதி மேலாளர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்கள் கூட ஆபத்துகளை எதிர்கொள்ள நேரிடும். எனவே யாராவது உத்தரவாத வருமானம் அளிப்பதாகக் கூறினால், உடனடியாக அவர்களிடமிருந்து விலகுங்கள்.
ஏனெனில் உத்தரவாத வருமானம் என்பது உண்மையானதாக இருந்தால், அந்த நபரே அமைதியாக பணக்காரர் ஆகிவிடுவார், உங்களுக்கு வாட்ஸ் அப்பில் (WhatsApp) தகவல் அனுப்பிக் கொண்டிருக்க மாட்டார்.
2. தெரியாத அழைப்புகள் மற்றும் குழுக்களிடமிருந்து வரும் உதவிக்குறிப்புகளைத் தவிர்க்கவும்
உங்களுக்கு எப்போதாவது இதுபோன்ற தொலைபேசி அழைப்புகள் வந்திருக்கிறதா?
“சார், நாளை எங்கள் பங்குகள் இரட்டிப்பாகும். இன்றே முதலீடு செய்யுங்கள்.”
அல்லது டெலிகிராம் குழுக்களில் செய்தி வந்திருக்கிறதா?
“கம்மியான வாய்ப்புதான் இருக்கு, இப்போதே வாங்குகள் இல்லை என்றால் பின்னர் வருத்தப்படுவீர்கள்”
இவை பாரம்பரிய மோசடி முறைகள். இந்த குழுக்களில் பெரும்பாலானவை மிகைப்படுத்தலை மட்டுமே தரும், லாபத்தை அல்ல. பெரும்பாலும், இதுபோன்ற குழுவை நடத்துபவர் ஏற்கனவே பங்குகளை வைத்திருப்பார், உங்களை வாங்க வைக்க நெருக்கடி கொடுப்பார், மேலும் நீங்கள் இழப்புகளில் சிக்கித் தவிக்கும் போது அமைதியாக வெளியேறிவிடுவார். எனவே, மிகைப்படுத்தப்பட்ட வலைகளில் சிக்கி உங்கள் பணத்தை இழக்காதீர்கள்.
3. லாபம் கிடைத்தாக கூறும் ஸ்கிரீன்ஷாட்கள்
இப்போதெல்லாம் மோசடி செய்பவர்கள் பயன்படுத்தும் மிகவும் பொதுவான தந்திரம், “பெரும் லாபத்தின்” ஸ்கிரீன்ஷாட்களைக் காட்டி, உங்களை அவர்களின் வலையில் சிக்க வைப்பது. சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ்அப்பில் பங்குகள், கிரிப்டோ போன்றவற்றில் இருந்து பெரும் லாபம் கிடைப்பதாக கூறும் ஸ்கிரீன்ஷாட்களை பகிர்பவர்களை நீங்கள் பார்க்கலாம். ஆனால், உண்மையில் அவர்கள் தங்களின் கட்டணம் செலுத்தி தெரிந்துக் கொள்ளக் கூடிய கோர்ஸ்களை உங்களிடம் விற்றுவிடுவார்கள்.
அடிப்படை ஆப்ஸ்களை கொண்ட எவரும் எண்களை மாற்றலாம், போலி முடிவுகளை காண்பிக்கலாம். மேலும், தங்கள் கணக்கில் போலி இருப்புகளைக் காட்ட டிரேடிங் ஆப்-இன் ஸ்கிரீன்களைக் கூட நகலெடுக்கலாம் அல்லது கையாளலாம்.
ஸ்கிரீன்ஷாட் படங்கள் உணர்ச்சியை உருவாக்குவதால் மோசடி செய்பவர்கள் இந்தப் படங்களைப் பயன்படுத்துகிறார்கள். ஒருவர் ஒரே இரவில் 10,000 ரூபாயை 1,00,000 ரூபாயாக மாற்றுவதை நீங்கள் பார்க்கும்போது, அது ஆர்வத்தைத் தூண்டுகிறது. அந்த உணர்ச்சி ஈர்ப்புதான் மக்களை சிக்க வைக்கிறது.
எனவே, நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
ஸ்கிரீன் ஷாட்களை நம்பாதீர்கள்.
தணிக்கை செய்யப்பட்ட அறிக்கைகள் அல்லது ப்ரோக்கர் அறிக்கைகள் போன்ற ஆதாரங்களை எப்போதும் கேளுங்கள்
நேரடி சந்திப்பைக் கோருங்கள்
உண்மையான முதலீட்டாளர்கள் லாபத்தை அரிதாகவே காட்டுகிறார்கள். அவர்கள் விரைவான லாபங்களில் அல்ல, நீண்ட காலத்திற்கு நிலைத்தன்மையில் கவனம் செலுத்துகிறார்கள்.
4. தெரியாத இணைப்புகளைக் கிளிக் செய்யாதீர்கள்
பல மோசடிகள் முதல் பார்வையில் உண்மையானதாகத் தோன்றும் தெரியாத லிங்கில் இருந்து வரும் செய்தி அல்லது மின்னஞ்சலுடன் தொடங்குகின்றன. இது உங்கள் ப்ரோக்கர், வங்கி அல்லது வர்த்தக பயன்பாட்டிலிருந்து “உங்கள் கணக்கைச் சரிபார்க்க” அல்லது “KYC விவரங்களைப் புதுப்பிக்க” கேட்கும் வகையில் வருவது போல் தோன்றலாம். சில நேரங்களில், மோசடி செய்பவர்கள் உங்கள் தகவல்களை அணுக ஒரு கவனக்குறைவான கிளிக் போதுமானது.
உங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி?
மின்னஞ்சல் அல்லது செய்திகளிலிருந்து வரும் தெரியாத இணைப்புகளை ஒருபோதும் கிளிக் செய்யாதீர்கள்.
அவசரப்படுத்தும் செய்திகளை ஒருபோதும் நம்பாதீர்கள்
அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை நேரடியாகப் பார்வையிடவும்
உங்கள் ஓ.டி.பி (OTP) அல்லது கடவுச்சொல்லை உள்ளிட வேண்டாம்
5. தொடர்ந்து கற்றுக்கொண்டே இருங்கள்
இந்த மோசடிகளைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, பங்குச் சந்தை மற்றும் முதலீடு பற்றி உங்களை நீங்களே அறிந்து கொள்வது. நீங்கள் ஒரு நிபுணராக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் முதலீட்டின் அடிப்படைகளைப் புரிந்துகொள்வது சந்தை எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிந்திருக்க உதவும். அடிப்படைகளை நீங்கள் புரிந்துகொண்டவுடன், மோசடிகளைக் கண்டறிய முடியும். நீங்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை ஒரு கவனக்குறைவான தருணத்தில் இழக்கும் அளவுக்கு இருக்கிறீர்கள். எனவே விழிப்புடன் இருங்கள், சரிபார்க்கப்பட்ட தளங்களை நம்புங்கள், விரைவாக பணம் கிடைக்கும் வழிகளை ஒருபோதும் துரத்தாதீர்கள். உங்கள் எதிர்காலம் “எளிதான லாபம்” என்று அழைக்கப்படுவதை விட மதிப்புமிக்கது.


